Homeசெய்திகள்சினிமாசர்ச்சைகளுக்கு மத்தியில் ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் 'தக் லைஃப்'!

சர்ச்சைகளுக்கு மத்தியில் ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் ‘தக் லைஃப்’!

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் நாளை (ஜூன் 5) உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். சர்ச்சைகளுக்கு மத்தியில் ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் 'தக் லைஃப்'!இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படத்திலிருந்து வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களுக்கு தீனி போட்டது. மேலும் ட்ரைலரில் திரிஷாவின் கதாபாத்திரம் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், கமல் – சிம்பு மோதிக்கொள்ளும் காட்சி எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. சர்ச்சைகளுக்கு மத்தியில் ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் 'தக் லைஃப்'!எனவே கர்நாடகாவில் நாளை இப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இதுவரை ரூ. 20 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 50 கோடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ