Homeசெய்திகள்சினிமா'GOAT' படத்தில் நடனமாடிய திரிஷா..... வருத்தத்தில் வெங்கட் பிரபு!

‘GOAT’ படத்தில் நடனமாடிய திரிஷா….. வருத்தத்தில் வெங்கட் பிரபு!

-

வெங்கட் பிரபு தற்போது விஜய் நடிப்பில் தி கிரேட்டெஸ்ட் ஆஃப் ஆல் டைம் – GOAT படத்தை இயக்கி வருகிறார். 'GOAT' படத்தில் நடனமாடிய திரிஷா..... வருத்தத்தில் வெங்கட் பிரபு!இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், நடிகை திரிஷா படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளதாகவும் தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் திரிஷா நடனமாடி உள்ள பாடல் அருமையாக வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 'GOAT' படத்தில் நடனமாடிய திரிஷா..... வருத்தத்தில் வெங்கட் பிரபு!இருப்பினும் வெங்கட் பிரபு, திரிஷா மீது வருத்தத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் வெங்கட் பிரபு கடைசியாக இயக்கியிருந்த நாக சைதன்யாவின் கஸ்டடி படத்தில் பாடல் ஒன்றுக்கு திரிஷாவை நடனமாட கேட்டிருந்தாராம். ஆனால் திரிஷா கஸ்டடி படத்தில் நடனமாட மறுத்துவிட்டாராம். ஆனால் இப்போது விஜய்க்காக GOAT படத்தில் நடனம் ஆடுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இது வெங்கட் பிரபுவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாம். மேலும் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ