Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு.... படப்பிடிப்பு எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு…. படப்பிடிப்பு எப்போது?

-

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு.... படப்பிடிப்பு எப்போது?

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். அந்த வகையில் இவர், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என படம் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அதே சமயம் வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் தாமதமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படம் பண்ண போவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூலை மாதத்தில் தொடங்கும் எனவும் இதனை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படமானது புதுவிதமான கதையில் உருவாகப் போகிறதாம். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு.... படப்பிடிப்பு எப்போது?மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடித்திருந்த தக் லைஃப் திரைப்படம் இன்று (ஜூன் 5) திரைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது தவிர சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ