Homeசெய்திகள்சினிமாபாதியில் நின்ற 'விடாமுயற்சி'..... மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!

பாதியில் நின்ற ‘விடாமுயற்சி’….. மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!

-

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகுதனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாதியில் நின்ற 'விடாமுயற்சி'..... மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதில் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மங்காத்தா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இவர்களுடன் இணைந்து ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அஜர்பைஜானில் 50 சதவீத படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது. அதன் பின்னர் வணிக ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி திரைப்படத்தில் நடித்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். பாதியில் நின்ற 'விடாமுயற்சி'..... மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10ஆம் தேதி தொடங்கப்பட்டு ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வணிக ரீதியிலான பிரச்சனை சற்று குறைந்துவிட்ட காரணத்தால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜார்பைஜானில் 2024 ஜூன் 20ஆம் தேதி அன்று தொடங்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. எனவே படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ