Homeசெய்திகள்சினிமாஅட்லீயை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது..... ஜவான் ப்ரிவியூ குறித்து விக்னேஷ் சிவன்!

அட்லீயை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது….. ஜவான் ப்ரிவியூ குறித்து விக்னேஷ் சிவன்!

-

அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கௌரி கான், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் இப்படத்தை தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உருவாகி வரும் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில்வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ இன்று வெளியாகி உள்ளது

மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஜவான் முன்னோட்டத்தின் மூலம் இந்த படம் ஹை பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிக தெளிவாக தெரிகிறது. மேலும் அனிருத்தின் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது.ஷாருக்கான் மொட்டை தலை தோற்றத்தில் செம மாஸாக காணப்படுகிறார். தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாராவின் காட்சிகளும் அதிரடி ஆக்சன் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இயக்குனர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பதை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது. ஜவான் பட ப்ரிவியூ சர்வதேச தரத்தில் இருக்கின்றன. நிறைய முயற்சிகள் கடின உழைப்புகள் பொறுமைகள் அதில் உள்ளன. அட்லீக்கு ஒரு பெரிய ஹக்! ஹாட்ஸ் ஆப்!
பாலிவுட்டில் எனது கிங் ஷாருக்கான் உடன் அறிமுகமானதற்கு நயன்தாராவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அனிருத் இசையில் மிரட்டி இருக்கிறார். விஜய் சேதுபதிக்கும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ