spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணி..... '96 பாகம் 2' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணி….. ’96 பாகம் 2′ குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

96 பாகம் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் கலக்கி வருகிறார். மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணி..... '96 பாகம் 2' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்! அதேசமயம் நடிகை திரிஷாவும் பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று மீண்டும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2018 ஆம் ஆண்டு 96 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தினை பிரேம்குமார் இயக்கி இருந்தார். அழகான காதல் கதையில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி இன்று வரையிலும் ராம் – ஜானு இந்த இரண்டு பெயர்களும் ரசிகர்கள் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது. ராம் – ஜானு என்ற இரண்டு பெயர்களையும் கேட்டவுடன் நினைவுக்கு வருவது புனிதமான காதல் தான். அந்த அளவிற்கு விஜய் சேதுபதி – திரிஷா ஆகிய இருவருக்கமான காதலின் ஆழத்தை மிக அழகாக காட்டி இருந்தார் பிரேம்குமார். ஏனென்றால் இன்றுள்ள காதல் படங்களில் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் போன்றவை இடம்பெற்றிருக்கும் நிலையில் 96 என்ற ஒரு டீசன்ட்டான காதல் கதை இன்றுவரையிலும் பேசப்படுகிறது. மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணி..... '96 பாகம் 2' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமார் பேட்டி ஒன்றில் 96 பாகம் 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதன்படி தற்போது அந்த ஸ்கிரிப்ட் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகிய இருவரும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. அத்துடன் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதே சமயம் பிரேம் குமாரும் தற்போது மெய்யழகன் படத்தை இயக்கி வெற்றி பெற்ற நிலையில் விரைவில் தன்னுடைய அடுத்த படமான 96 பாகம் 2 – வை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ