Homeசெய்திகள்சினிமாபுத்தகமாக வெளியான லியோ கதை... இணையத்தில் டிரெண்டிங்...

புத்தகமாக வெளியான லியோ கதை… இணையத்தில் டிரெண்டிங்…

-

- Advertisement -
விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற லியோ திரைப்படத்தின் கதை புத்தகமாக வௌியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் தளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். ஆண்டுக்கு ஒரிரு திரைப்படங்கள் வெளியானாலும், அவை அனைத்துமே ஹிட் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் லியோ. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, மேலும் பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

we-r-hiring
லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வசூல் வேட்டையும் நடத்தியது. இதுவரை இல்லாத அளவு கேரளாவில் சுமார் 200 கோடி ரூபாய் லியோ திரைப்படம் வசூலித்தது. மேலும், ஓடிடி தளத்திலும் லியோ படம் வெளியானது

இந்நிலையில், லியோ படத்தின் கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இந்த புத்தகத்தை பலரும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

MUST READ