spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படப்பிடிப்பை நிறைவு செய்த விஷ்ணு விஷால்!

-

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.
செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

we-r-hiring
laal-salaam
laal-salaam

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைகளத்தில் உருவாகி வருகிறது. அதனால் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் இப்படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் தனது பகுதிக்கான பகுதிகளை நிறைவு செய்தார்.

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பி நிறைவு செய்துள்ளார். அதை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

லால் சலாம் படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ