உங்க சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று நடிகர் அஜித் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு நடிகர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலும் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘விடா முயற்சி‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் தான் இயக்கயிருப்பதாகவும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தயாரிப்பாளர் தரப்பில் கதையில் திருப்தி இல்லை என்று தெரிவித்ததால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் இணைந்துள்ளார். படத்திலிருந்து வெளியேறினாலும் விக்னேஷ் சிவன் அதற்கு எதிர்மறையாக தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் படக்குழுவினரை வாழ்த்தி தான் வருகின்றார்.
தற்போது அஜித் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார்
உங்கள் மகிழ்ச்சியே எங்களுக்கு எல்லாம்
என்றென்றும் உங்கள் மீது நிபந்தனையற்ற காதல் Endrum nirandaram
விடா முயற்சி… மகிழ் திருமேனி சார், அனிருத் மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Happy birthday #AjithSir ❤️😇💐🏆❤️❤️
your happiness is everything for us 😇😇❤️❤️
Unconditional love Endrum nirandharam ❤️😇🙏🙏💐💐😇😇❤️❤️All the best for #VidaMuyarchi #AK62 magizhThirumeni sir , @anirudhofficial nirav sir @LycaProductions @SureshChandraa and the whole… pic.twitter.com/ZZeipYAvC7
— VigneshShivN (@VigneshShivN) April 30, 2023