மேகதாது அணை கட்டப்படுவது உறுதி என கர்நாடக பட்ஜெட்டில் பாஜக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட கடந்த வருடம் 2022 – 2023 பட்ஜெட்டில் பாஜக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கர்நாடக அரசின் இந்த அணை திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் இந்த அணை கட்டக்கூடாது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசும் கர்நாடக சட்டமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அனைத்து தடைகளையும் உடைத்து மேகதாது அணை கட்டப்படும் என்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து அணையை அரசு கட்டியே தீரும் என்று முதல்வர் தனது பட்ஜெட்டில் உரையில் உறுதியாக தெரிவித்துள்ளார்.
