சுயமரியாதை திருமணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்!

 

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
File Photo

சுயமரியாதை திருமணங்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்றாலும் செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர், வழக்கறிஞர்கள் முன்னிலையில் செய்துக் கொண்ட சுயமரியாதைத் திருமணத்தை செல்லாது என வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவை ரத்துச் செய்ததுடன், சுயமரியாதைப் போன்ற திருமணங்களுக்கு பொதுவிழா போன்ற அறிவிப்பு தேவையில்லை என கருத்துத் தெரிவித்துள்ளது.

“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!

அத்துடன், தொழில் முறையாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடக்கும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement