Homeசெய்திகள்இந்தியா"காவிரியில் தமிழகத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்"- காவிரி ஒழுங்கற்றுக் குழு பரிந்துரை!

“காவிரியில் தமிழகத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”- காவிரி ஒழுங்கற்றுக் குழு பரிந்துரை!

-

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!
File Photo

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் உத்தரவு!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், தலைநகர் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்கள் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு தரப்பில் வினாடிக்கு 3,000 கனஅடி மட்டுமே திறக்க முடியும் என ஒழுங்காற்று ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!

எனினும், இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

MUST READ