சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தை முன்வைத்து கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டதால், அவை முழுவதும் பரபரப்பாக மாறியது.
சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணை முன்னேற்றம் குறித்து அரசு தெளிவான பதில் அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கை நோக்கி முன்னேற முயன்றனர். இதனால் சட்டப்பேரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை மீது ஏற முயன்றதைத் தொடர்ந்து, அவை பாதுகாவலர்கள் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர். அவையின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து சபாநாயகர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்த சூழ்நிலையில், சட்டப்பேரவையின் இயல்பான நடவடிக்கைகள் தொடர முடியாத நிலை உருவானதால், கேரள சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் விசாரணை விரைவாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!


