spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!

-

- Advertisement -

மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். இவர் தமிழ் மொழியிலும் கவனம் செலுத்தி வருகிறார். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!அந்த வகையில் இவர் தற்போது தனுஷ் நடிப்பில் ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது தவிர இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் ஜெயராம். இந்நிலையில் நடிகர் ஜெயராமை சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சபரிமலை கோயிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்திருக்கும் நிலையில் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!அதன்படி டிசம்பரில் 9 முதல் 11ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் கேரள உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஜெயராமிடம் விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை கோயில் கதவு நிலைகளை தனது வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயராமை கைது செய்து விசாரிக்க, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ