spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…

தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…

-

- Advertisement -

மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்தை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக கூறி, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட மொத்தம் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் வெங்கட்ராமன், ஹிபி எடின், அமரிந்தர் சிங், குர்ஜித் ஆஜிலா, கிரண் ரெட்டி, குரியாகோஸ், பிரசாந்த் படோல் ஆகியோரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

we-r-hiring

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் மக்களவை கடும் பரபரப்புக்குள்ளானது.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு, சஸ்பெண்ட் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

MUST READ