அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை மற்றும் அணைக்கட்டு வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகக் முடங்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 99 ஆக உயர்ந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதிலும் பெய்து வரும் பெய்து வரும் வழக்கத்திற்கு மாறான கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாயக் கட்டத்தைத் தாண்டி சீறிப்பாய்ந்து வருகிறது.

12 மாவட்டங்கள் கடும் பாதிப்பு
அசாமில் கோலாகாட், சிவசாகர், ஜோர்ஹாட் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலைகள் அனைத்தும் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. சுமார் 1.68 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் தங்களின் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரவட்டம்
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பான
இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF), மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும் (SDRF) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உணவும், குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க மருத்துவக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை மாநில அரசு விரைவுபடுத்தியுள்ள போதிலும், தொடர் மழை காரணமாகச் சில இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சவால்கள் நீடித்து வருகின்றன.
கொட்டித் தீர்க்கும் மழையால் ஆபத்து? இடுக்கி அணையில் உபரி நீர் திறப்பு… மக்களே உஷார்!
