spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஏ.ஐ.மாநாடு....விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை…

ஏ.ஐ.மாநாடு….விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை…

-

- Advertisement -

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை உயர்ந்துள்ளது.ஏ.ஐ.மாநாடு....விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை… “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச ஏ.ஐ. மாநாடு டெல்லியில் வரும் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உலகளவில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் இந்த மாநாடு பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. புகழ்பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்கள் டெல்லி வருவதால், ஒரு நாள் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு அருகே அமைந்துள்ள தி ஓபராய் நட்சத்திர ஓட்டலில், ஒரு இரவு தங்க அறை வாடகை ரூ.29.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மெட்டா நிறுவனத்தின் அலெக்சாண்டர் வாங், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, டெமிஸ் ஹசாபிஸ், என்விடியா நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, டெல்லி முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகளுக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை இருந்த சாதாரண நட்சத்திர ஓட்டல் அறை வாடகை, தற்போது ரூ.5.6 லட்சம் வரை உயர்ந்துள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் மான்சிங் சாலையில் அமைந்துள்ள தாஜ் மகால் ஓட்டலில், ஒரு இரவு அறை வாடகை ரூ.22.5 லட்சமாக உள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள லீலா நட்சத்திர ஓட்டலில் ஒரு அறையின் வாடகை ரூ.14.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏ.ஐ. மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சுமார் 20,000 அறைகள் மட்டுமே இருப்பதால், அறை வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநாடு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்தே அறை வாடகை உயர்வை கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநாடு நெருங்கும் நாட்களில் டெல்லி நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடுதான் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

MUST READ