தெலங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பீச்சுபள்ளி ஹனுமார் கோயில் வளாகத்திற்குள் திடீரெனப் பெரிய முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றிலிருந்து கரையேறி வந்த அந்த முதலையைக் கண்டு அஞ்சாமல், கோயிலின் பூசாரி அதனருகே அமர்ந்து மழை வேண்டிச் சிறப்புப் பூஜைகள் செய்த விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலைக்கு அருகிலேயே அமர்ந்து தீவிர வழிபாடு!
பீச்சுபள்ளி ஹனுமார் கோயிலின் பூசாரியான அனில் சர்மா, திடீரெனக் கோயில் அருகே வந்த முதலையைக் கண்டு சிறிதும் பதற்றமடையவில்லை. மாறாக, அதை இறைவனின் தூதனாகவோ அல்லது தெய்வீக அறிகுறியாகவோ கருதிய அவர், முதலையின் அருகிலேயே அமர்ந்து கொண்டார்.
பப்பரபரப்பான அந்தச் சூழலிலும், நாடு செழிக்கவும் நல்ல மழை பெய்ய வேண்டியும் தீவிரமாக மந்திரங்களை ஓதி, முதலைக்குச் சிறப்புப் பூஜைகள் செய்தார். இந்த அபூர்வக் காட்சியைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
பாதுகாப்பாக மீட்பு – வனத்துறை நடவடிக்கை
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், முதலைக்கு எவ்வித தீங்கும் ஏற்படாதவாறு அதைப் பாதுகாப்பாகப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பூசாரியின் வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதலையைச் சாதுரியமாகக் கைப்பற்றிய வனத்துறையினர், அதை மீண்டும் அதன் இயற்கை வாழிடமான கிருஷ்ணா ஆற்றிலேயே பத்திரமாக கொண்டு போய் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரசியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பஞ்சாப் என நினைத்து தவறான வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங்: போலிஸ் விளக்கம் & அறிவுரை!
