உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய வடமாநிலங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு இனி தங்கள் நிறுவனத்தில் வேலை வழக்கம் முடியாது எனப் பெங்களூருவைச் சேர்ந்த ‘ஏஐ ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்’ (AI SPORTS WORLD) நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என விளக்கம்
இந்த விசித்திரமான மற்றும் கடுமையான முடிவிற்குக் காரணத்தைக் குறிப்பிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் தெரிவித்துள்ளது.

சமீபத்திய அசம்பாவித சம்பவமே காரணம்
இதுகுறித்து மேலும் விளக்கம் அளித்துள்ள ஏஐ ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனம்:
நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இரண்டே மாதங்களில், ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் சக பெண் ஊழியரை வன்கொடுமை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விளையாட்டு தொடர்பான எங்கள் நிறுவனத்துடன் சிறுவர், சிறுமிகள் மற்றும் குழந்தைகள் அதிகம் இணைந்து செயல்படுவதால், அவர்களின் பாதுகாப்பில் எந்தவிதக் அபாயத்தையும் (Risk) எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
இதன் காரணமாகவே குறிப்பிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் தொழில் நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
