Homeசெய்திகள்இந்தியாஅசாம் அரசு அதிரடி: கட்டாயமாக்கப்பட்ட முஸ்லிம் திருமணப் பதிவு - புதிய விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

அசாம் அரசு அதிரடி: கட்டாயமாக்கப்பட்ட முஸ்லிம் திருமணப் பதிவு – புதிய விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

-

- Advertisement -

அசாம் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் “அசாம் முஸ்லிம் திருமணப் பதிவு (கட்டாயம்) விதிகள், 2026” (Assam Muslim Marriage Registration (Compulsory) Rules, 2026) என்ற புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இதன் மூலம், நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த பாரம்பரிய காஜி (Kazi) முறைக்குப் பதிலாக, இனி அரசு நியமிக்கும் அதிகாரப்பூர்வப் பதிவாளர்கள் மூலமாக மட்டுமே முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் பதிவு செய்யப்படும்.

தேவைக்கேற்ப பஞ்சாயத்து மட்டத்திலான அதிகாரிகளுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்படலாம் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.

குழந்தைத் திருமணத் தடுப்பும் சட்டப் பாதுகாப்பும்

முன்னதாக அமலில் இருந்த பிரிட்டிஷ் காலத்துச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கம் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதாகும்.

இதன் கீழ், திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 21-ஆகவும், பெண்களுக்கு 18-ஆகவும் கண்டிப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளை உரிய காலத்தில் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வதன் மூலம் பெண்களுக்கான சொத்துரிமை, ஜீவனாம்சம் மற்றும் பிற சமூகப் பாதுகாப்புகள் முழுமையாக உறுதி செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை மூலம் அசாமில் அனைத்துச் சமூகத்தினருக்குமான திருமணப் பதிவு முறைகளை ஒரே சீரான கட்டமைப்புக்குள் கொண்டுவர மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்கத்தில் மட்டும் ரூ.286 கோடி செலவு: தேர்தல் ஆணையத்தில் பாஜக சமர்ப்பித்த அதிரடிச் செலவுக் கணக்கு!

MUST READ