Homeசெய்திகள்இந்தியாசபரிமலையில் தொடரும் உயிரிழப்புகள் – இதய பாதிப்பால் 7 ஐயப்ப பக்தர்கள் பலி; மாரடைப்பு ஏற்பட்ட...

சபரிமலையில் தொடரும் உயிரிழப்புகள் – இதய பாதிப்பால் 7 ஐயப்ப பக்தர்கள் பலி; மாரடைப்பு ஏற்பட்ட 14 பேர் உயிர் காப்பாற்றப்பட்டனர்!

-

- Advertisement -

சபரிமலை மண்டல காலத்தில் ஐயப்ப பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த நவம்பர் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இதய பாதிப்பு மற்றும் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.சபரிமலையில் தொடரும் உயிரிழப்புகள் – இதய பாதிப்பால் 7 ஐயப்ப பக்தர்கள் பலி; மாரடைப்பு ஏற்பட்ட 14 பேர் உயிர் காப்பாற்றப்பட்டனர்!

அதேநேரத்தில், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், மலைப்பாதையில் பயணம் செய்யும்போதும், சன்னிதானம் மற்றும் பம்பா பகுதிகளிலும் சில பக்தர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இதய பாதிப்பு மற்றும் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பாதிப்பு கொண்டவர்களும் அடங்குவர்.

சிலர் சன்னிதானம் மற்றும் பம்பா பகுதிகளில் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கப்படுகிறது.

உயிரிழந்த 7 பக்தர்களின் விவரங்கள்:

1. கண்டா ராம்பாபு – 45 வயது – ஆந்திரப் பிரதேசம்
2. எமாவராபு ரமேஷ் – 45 வயது – ஆந்திரப் பிரதேசம்
3. சுரேஷ் – 42 வயது – கேரளா
4. ஜெமி அட்டகீஸ்வரர் ராவ் – 48 வயது – ஆந்திரப் பிரதேசம்
5. மல்லிகா ராஜப்பன் – 59 வயது – கேரளா
6. விமல் – 44 வயது – தமிழ்நாடு
7. சுகாஸ் – 36 வயது – கர்நாடகா

நடப்பாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலைக்கு வந்த பக்தர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

சபரிமலை மலைப்பாதையில் நீண்ட தூரம் நடந்து ஏறும்போது இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ள பக்தர்கள் முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது உடல்நிலைக்கு ஏற்ப பயணத்தை மேற்கொள்வதுடன், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்தி ஏற்பட்ட உயிரிழப்புகளால் மதுபானக் கடைகளுக்கு வெளியே மருத்துவப் பரிசோதனை!

MUST READ