Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டத் தயக்கம் ஏன்? மத்திய அரசுக்கு எதிராக ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டத் தயக்கம் ஏன்? மத்திய அரசுக்கு எதிராக ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

-

- Advertisement -

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு தாமதமாவதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசை மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரங்களை முன்வைத்து அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டியதோடு, “ஞானேஷ் தெஃப்ட் அரேஞ்சர்ஸ் (GTA) நட்சத்திரங்கள் அம்பலமாகிவிட்டனர்” எனக் குறிப்பிட்டுத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றால் இத்தகைய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்பதாலேயே கூட்டத்தொடரை அறிவிப்பதில் அரசு தயக்கம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

"விஜய்யின் அந்த ஒரு முடிவு.. அரசியலில் அமையப்போகும் ஆபத்து? தராசு ஷ்யாம் ஓபன் டாக்!"

வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அட்டவணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட்டு நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சத்குருவுடன் உரையாடியபோது ஷாருக்கானுக்கு அமைதியாக இருக்க சைகை செய்த ஆனந்த் அம்பானி! இணையத்தில் வைரலாகும் வீடியோ

MUST READ