Homeசெய்திகள்இந்தியாஜார்க்கண்டில் அரங்கேறிய கலகலப்பு.. மதுபானக் கடைக்குள் புகுந்து சரக்கடித்துவிட்டு போதையில் படுத்த குரங்கு!

ஜார்க்கண்டில் அரங்கேறிய கலகலப்பு.. மதுபானக் கடைக்குள் புகுந்து சரக்கடித்துவிட்டு போதையில் படுத்த குரங்கு!

-

- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று அங்கிருந்த மதுவை அருந்திவிட்டு, போதையின் உச்சத்தில் கடையிலேயே படுத்துத் தூங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது செம வைரலாகி வருகிறது. போதையில் தள்ளாடிய குரங்கைக் கண்டு கடை உரிமையாளர்களும் பொதுமக்களும் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.ஜார்க்கண்டில் அரங்கேறிய கலகலப்பு.. மதுபானக் கடைக்குள் புகுந்து சரக்கடித்துவிட்டு போதையில் படுத்த குரங்கு!

கடைக்குள் புகுந்த குறும்புக்காரக் குரங்கு

ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு வந்த கலகலப்பான குரங்கு ஒன்று, யாருடைய கவனமும் இல்லாத நேரத்தில் திடீரெனக் கடைக்குள் புகுந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைச் சேதப்படுத்தியதோடு, அதிலிருந்து மதுவையும் ருசித்துள்ளது. சிறிது நேரத்திலேயே மதுவின் போதை தலைக்கேறியதால், நிலை தடுமாறிய அந்தக்குரங்கு அங்கிருந்த மேசை மீதும், தரையிலும் அமர்ந்து லூட்டி அடித்துள்ளது. பின்னர் போதை தாங்காமல் அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்றுள்ளது.

we-r-hiring

வைரல் வீடியோ மற்றும் மீட்புப் பணி

குரங்கு ஒன்று போதையில் மயங்கித் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த விநோதக் காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது உடனடியாகத் தீயாய் பரவியது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறை மற்றும் மீட்புக் குழுவினர், கடையின் உள்ளே போதையில் தூங்கிக் கொண்டிருந்த குரங்கைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் கலகலப்பையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.

வங்கி வேலைநிறுத்தம் எதிரொலி: நாளை ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் செயல்படும்! ஏடிஎம் பணம் எடுப்பதற்கு கட்டணம் இல்லை

MUST READ