Homeசெய்திகள்இந்தியாநாளை முதல் 3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நாளை முதல் 3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

-

- Advertisement -

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். United Forum of Bank Unions (UFBU) உள்ளிட்ட வங்கி தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

we-r-hiring

எதற்காக வேலைநிறுத்தம்?

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மேலும், வங்கி ஊழியர்களின் நலன் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சில கோரிக்கைகளும் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு செப்டம்பர் 11-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம்

செப்டம்பர் 28 திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 30 புதன்கிழமை வரை வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 30 வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பு நாளாக இருப்பதால், இந்த வேலைநிறுத்தம் முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கமான விடுமுறையுடன் சேர்த்து வங்கிச் சேவைகள் தொடர்ந்து பல நாட்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்காக இன்று வங்கிகள் திறப்பு

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அன்றைய தினம் வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ATM-களுடன் தொடர்புடைய கிளைகள் மற்றும் Currency Chests செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

எந்த வங்கிகள் பாதிக்கப்படலாம்?

இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI, Bank of Baroda, Punjab National Bank, Canara Bank, Union Bank of India, Indian Bank, Indian Overseas Bank உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இதில் அடங்கும். தனியார் வங்கிகள் பொதுவாக இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காததால், அவற்றின் வழக்கமான கிளைச் சேவைகள் பெரும்பாலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன சேவைகள் பாதிக்கப்படலாம்?

வங்கி கிளைகளில் நேரடியாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை பரிவர்த்தனை மற்றும் சில அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், ATM, UPI, Internet Banking, Mobile Banking போன்ற டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து செயல்படும். SBI உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்கள் முக்கியமான வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.

ATM பயன்பாடு தொடர்பாக முக்கிய தகவல்

வேலைநிறுத்த நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு பணத் தேவைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுத்துறை வங்கிகள் ATM-களில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

மேலும், செப்டம்பர் 28 முதல் 30 வரை சில பொதுத்துறை வங்கிகள், இலவச மாதாந்திர வரம்பைத் தாண்டிய ATM பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை தற்காலிகமாக தள்ளுபடி செய்துள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் முன்கூட்டியே

வங்கி வேலைநிறுத்தத்தால் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க, செப்டம்பர் மாத மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை செப்டம்பர் 25-ம் தேதி முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் வங்கி கிளைகளில் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் உள்ள வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்த காலத்துக்கு முன்பாக அவற்றை முடித்துக்கொள்வது தொடர்பாக வங்கிகளின் அறிவுறுத்தல்களை கவனிக்கலாம்.

டெல்லியில் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி.. கஞ்சிரா வாசித்து ரசித்த பிரதமர் மோடி!

MUST READ