Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் முயற்சிகளால் உலகம் முழுவதும் பிரபலமான யோகா! – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் முயற்சிகளால் உலகம் முழுவதும் பிரபலமான யோகா! – பிரதமர் மோடி பெருமிதம்

-

- Advertisement -

இந்தியாவின் முயற்சிகளால் யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளதாகவும், சர்வதேச யோகா தினம் உலக நாடுகள் முழுவதும் கொண்டாடப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கர்நாடக மாநிலத்தில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இந்தியாவைப் புரிந்துகொள்ளும் நுழைவாயில் யோகா

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான நுழைவு வாயிலாக யோகா விளங்குகிறது. இந்தியாவின் முயற்சிகளால் யோகா தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும், மதிய மற்றும் இரவு உணவின்போது மக்கள் என்னுடன் யோகாவைப் பற்றி விவாதிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

யோகாவின் ஆற்றல்

மேலும், பெங்களூரு நகரத்தில் யோகாவின் அற்புதமான ஆற்றலை அனுபவிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

யோகாவுடன் தொடர்புடைய பல ஆசிரியர்களும் அறிஞர்களும் கர்நாடக மாநிலத்தில்தான் பிறந்ததாகக் கூறிய பிரதமர், மறைந்த புகழ்பெற்ற கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமார் ஒரு யோகா பயிற்சியாளராக இருந்ததையும் நினைவுகூர்ந்தார்.

இந்தியாவின் பாரம்பரியமான யோகா கலையை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு வருவது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

பெங்களூரு மெட்ரோவின் பிங்க் லைனைத் தொடங்கி வைத்து பயணம் செய்த பிரதமர் மோடி – நவம்பர் 14 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது!

MUST READ