spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉயர்நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பிராமணர்கள் – மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 80% பேர் பிராமணர்கள் – மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

-

- Advertisement -

2021-2026 வரை நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளில் கிட்டத்தட்ட 80% பேர் பிராமணர்கள் என்ற தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளாா்.உயர்நீதிமனற் நீதிபதிகளில் 80% பேர் பிராமணர்கள் – மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு , மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் (சுய பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளாா்.

we-r-hiring

அவர் அளித்த தகவலின்படி, 01.01.2021 முதல் 30.01.2026 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 26 பேர் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள், 14 பேர் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள், 80 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 37 பேர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள். அதே காலகட்டத்தில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 96 பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.

பொறுப்பை மத்திய அரசு நீதிபதிகள் நியமன விவகாரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – தலைமை நீதிபதி (CJI) பரிந்துரையின் அடிப்படையில் நடைபெறுகிறது.

“நடைமுறை குறிப்பாணையின்படி” (MoP), உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுகளைத் தொடங்குவதற்கான பொறுப்பு இந்தியத் தலைமை நீதிபதியிடம் உள்ளது, அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுகளைத் தொடங்குவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் உள்ளது என அமைச்சர் விளக்கம் அளித்தார்.

“இருப்பினும், நீதித்துறையில் சமூக பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, மேலும் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவுகளை அனுப்பும் போது, ​​உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்காக, பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களைச் சேர்ந்த பொருத்தமான நபர்களுக்கு உரிய பரிசீலனை வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாக மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 2012 முதல் மே 2014 வரை இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், அமைச்சரின் பதிலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.  உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களின் முக்கியத்துவம் பின்னுக்க தள்ளப்பட்டுள்ளது என்றும், “மோசமான பிரதிநிதித்துவம்” வழங்கப்பட்டுள்ளது என்றும், தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

“நமது அரசியலமைப்பு சட்டம் இயற்றி 76வது ஆண்டில் நாம் நுழையும் வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் பல்வேறு குறைபாடுகள்  நீடிப்பதாக குற்றம்சாட்டினாா். சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களின்  பிரதிநிதித்துவம் நீதிமன்றங்களில் குறைந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளாா்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் வெளிப்படையான பாகுபாடு உள்ளது,”இது கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளாா். சதவீதங்களில் வழங்கப்பட்ட தரவுகளின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 4.38% SC பிரிவைச் சேர்ந்தவர்கள், 2.36% ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 13.49% OBC பிரிவினர், அதே சமயம் 79.76% “பிராமணர் சமூகம்”  சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.

2018 முதல் அக்டோபர் 30, 2024 வரை நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் எண்ணிக்கை மோசமாக இருந்தது என்றும், 3.07% (21) பேர் SC பிரிவைச் சேர்ந்தவர்கள், 2.05% (14) பேர் ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 11.99% (82) பேர் OBC பிரிவினர் மற்றும் மீதமுள்ளவர்கள் 82.89% (567) பேர் பிராமணர் சமூகம்”  சேர்ந்தவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் குறிப்பிட்டுள்ளாா்.

“இது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்கின்ற செயல் மட்டுமல்ல, அபத்தமாக விதி மீறல்கள் என்பதை காட்டுகிறது. அதனால், சில வகுப்புகளைச் சேர்ந்த நீதிபதிகளை நியமனம் செய்வதால் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு தொடர்பான பிரச்சினைகளில் பாதிப்புகளை உருவாக்கும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த பின்னணியின் அடிப்படையில் சட்டங்களை விளக்கி தீர்ப்புகளை வழங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“நாட்டிற்கு மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நீதித்துறை அவசியம்; அது இல்லாமல், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள மக்களின் உரிமைகள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும், இது சமூக வேறுபாட்டிற்கு வழிவகுக்கும். மேலும், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை சேர்ந்த நீதிபதிகள் அதிக அளவில் இடம்பெறாதது தெளிவாகத் தெரிகிறது; இது அவர்களுக்கு தகுதிகள் குறைவாக இருக்கிறது என்ற அர்த்தம் அல்ல. அவர்களை பாகுபாடு காட்டி  நீதித்துறையிலிருந்து விலக்கி வைப்பதற்கான உறுதியான முடிவு,”  என்பதை இந்த அட்டவணை காட்டுகிறது.

உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஓபிசி/எஸ்சி/எஸ்டி விகிதாசார பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் வலியுறுத்தியுள்ளாா்.

 

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும்  – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

MUST READ