Homeசெய்திகள்நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும்  - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும்  – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

-

- Advertisement -

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது :- உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என்பது அரசியல் அமைப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சில குழுக்களில் இருந்து மட்டும் பிரதிநிதித்துவம் வராமல் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் வர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 79 விழுக்காடு நீதிபதிகள், மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டும் இருக்கும் உயர்சாதியை சேர்ந்தவர்கள் ஆவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 34 நீதிபதிககளில், 34 சதவீதம் பேர் ஒரு வகுப்பை சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்ற கொலீஜியம் ஆவணங்கள் யாருடைய பார்வைக்கும் கிடைப்பதில்லை ரகசியமாக வைக்கப்படுகிறது. நீதிபதிகளின் உறவினர்கள், மூத்த வழக்கறிஞர்களின் உறவினர்கள் என்று ஒரு சிறிய குழு ஆதிக்கம் செலுத்துகிறது.

போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கைக தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளது. சமூகநீதி அடிப்படையில் நீதிபதி நியமனம் உள்ளதா என கேள்வி எழுப்புகிறோம். மதுரை நீதிபதி விக்டோரியா பாஜக பின்புலம் கொண்டவர். அவர் நீதிபதிக்கான தகுதி இல்லை என வழக்கறிஞர்கள் புகார்கள் அனுப்பினர். ஆனால் ஏற்கனவே பரிந்துரை செய்துவிட்டோம் என கூறிவிட்டனர். இதுவரை ஏற்படுத்தப்பட்ட சமூகநீதி கடைபிடிக்க வேண்டும். ஒரு சிறிய குழுவுக்கு அதி முக்கியத்துவம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். புதிதாக தகுதிவாய்ந்த பெண்கள் எல்லா சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். 2 முறை கொலிஜியம் பரிந்துரை செய்தும் நியமனம் செய்யாமல் உள்ள ஜான் சத்யன், நீலகண்டன் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும்.

 

75 ஆண்டுகளில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள மக்களின் பிரதிநிதிகள் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி, பெண்கள், சிறுபான்மையினருக்கு, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. இதில் 2014க்கு பிறகு மோசமான நிலை வந்துள்ளது.  ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் உள்ளவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 65 நீதிபதிகள் உள்ளனர். 10 இடங்கள் காலியாக உள்ளது. பல சமூகங்களை சேர்ந்தவர்கள் இதுவரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்ததே இல்லை. இதுவரை நடைபெற்ற நியமனத்தில் 601 இல் 457 பேர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து எஸ்.சி வகுப்பை சேர்ந்த ஒருவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்றுள்ளார்.

உச்சநீதிமன்றம்

கேரளாவில் இருந்து உச்சநீதிமன்றம் சென்ற 18 பேரில் ஒருவர் கூட பிற்படுதபட்டவர்கள் இல்லை, ஈழவர்கள் சமூகத்தை சேர்ந்த பினராய் விஜயன் முதலமைச்சராக முடிகிறது. ஆனால் ஈழவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முடியவில்லை. யாதவர்கள் முதல்வர்களாக முடிகிறது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முடிவதில்லை. விரைவில் நியமிக்கப்பட உள்ள நீதிபதிகள் நியமனத்தில்
இதுவரை இல்லாத சமூகங்களில் இருந்து நீதிபதிகள் நியமனம் செய்ய வேண்டும். இந்த ஆண்டு 25 முதல் 30 நியமனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நடைபெறும் போது அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும்.  தற்போது நீதிபதிகள் அதிகமாக உள்ள சமூகத்திற்கு மேலும் நியமனங்கள் செய்ய கூடாது.

வழக்கறிஞர்களில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 40 பேரில், 8 பேர் பிராமணர்கள் இருக்கின்றனர். மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். நீதிபதிகளை கொலிஜியம் நியமிப்பதில்லை. கொலிஜியம் பெயரை பயன்படுத்தி மத்திய அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது. வருமானவரி துறை, அமலாக்கத் துறை போன்று நீதித் துறையும் மத்திய அரசு கையில் எடுத்துக்கொள்கிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

MUST READ