spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்PMAY திட்டத்தின் வீடு கட்ட மானியம் பெறுவது எப்படி?

PMAY திட்டத்தின் வீடு கட்ட மானியம் பெறுவது எப்படி?

-

- Advertisement -

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி.? முழு விவரம் இங்கே காணலாம்.PMAY திட்டத்தின் வீடு கட்ட மானியம் பெறுவது எப்படி?வறுமைக் கோட்டுக் கீழே உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில், ”பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்”  மிக முக்கிய திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம் வீடு இல்லாத  ஏழை எளிய மக்கள் கடனுதவி பெற பொிதும் துணைப் புாிகிறது.  அதனை பெறுவதற்கு  ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தாலே போதுமானது. ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்க அரசு காத்திருக்கிறது.

இத்திட்டமானது கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது. மேலும், அரசு தரப்பில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வீடுகள் கட்டி முடித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் மூன்று தவணையாக பணம் வழங்கப்படுகின்றன. முதல் தவணையாக ரூ.50,000மும், இரண்டாவது தவணையாக ரூ.1.50 லட்சமும், மூன்றாவது தவணையாக ரூ.50,000மும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 2.50 லட்சம் ரூபாயில் 1 லட்சத்தை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசு 1.50 லட்சம் மானியமாக அளிக்கிறது.

we-r-hiring

இத்திட்டத்தின் நோக்கமே அனைவருக்கும் வீடு வழங்குவதே ஆகும். ஏற்கெனவே ஒரு வீட்டை சொந்தமாகக் கொண்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. எனவே புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள். https://pmaymis.gov.in என்ற இணையதள முகவரி மூலம் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் உடனடி வேலை….கை நிறைய சம்பளம்…உடனே விண்ணப்பிங்க…

 

 

MUST READ