spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் இந்த ஒரே அட்டை இருந்தால் ரூ.2 லட்சம் வரை உதவி – உழவர் பாதுகாப்பு...

தமிழ்நாட்டில் இந்த ஒரே அட்டை இருந்தால் ரூ.2 லட்சம் வரை உதவி – உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து முழு விவரம்

-

- Advertisement -

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில், இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அந்த அட்டை யாரெல்லாம் பெற விண்ணப்பிக்கலாம், உழவர் அட்டை பெறுவது எப்படி? என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளாம்.தமிழ்நாட்டில் இந்த ஒரே அட்டை இருந்தால் ரூ.2 லட்சம் வரை உதவி – உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து முழு விவரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசின் மிக முக்கியமான நலத்திட்டமாக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

we-r-hiring

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உழவர் பாதுகாப்பு அட்டை (மெரூன் நிறம்) வைத்திருந்தால், உயிரிழப்பு, விபத்து, கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நிதி உதவி பெற முடியும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருக்கும் நபர் இயற்கையாக மரணம் அடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை  ரூ.20,000 மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவி தொகை ரூ.2,500, மொத்தமாக  ரூ.22,500 வழங்கப்படும். மேலும் அரசாணை எண் 514-ன் படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு (04.08.2025க்கு பிறகு நிகழ்வு ஏற்பட்டால்) இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை ரூ.30,000 மற்றம் ஈமச்சடங்கிற்கான தொகையாக  ரூ.10,000, மொத்தம்  ரூ.40,000 என வழங்கப்படும். அதேபோன்று விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு  ரூ.2,00,000 மற்றும் விபத்தால் உடல்உறுப்பு இழப்பு ஏற்படின்  ரூ.1,00,000-மாக உதவித் தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

இதில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2500/. தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் அளிக்கப்பட்டிருப்பின் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக உள்ள நபரின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000/- மட்டுமே வழங்கப்படும் எனவே முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பின்வரும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் (TB,CANCER,KIDNEY DISEASES )மற்றும் HIV தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 மாததிற்குள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கிராம நிருவாக அலுவலர் மற்றும் தனிவட்டாட்சியர் (சபா.தி) அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் தவிர்க்க இயலாத மற்றும் அறியாமையின் காரணங்களினால் காலதாமதமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கும் உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற இயலும் (காலதாமத காலம் அதிகபட்சம் 1 % வருடம் வரை) எனவே மேற்கண்டவாறு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற நீங்கள் வசிக்கும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சரக வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?
நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் சிறு/குறு விவசாயிகள் 2.50 ஏக்கருக்கு மிகாத நன்செய் நிலம் 5.00 ஏக்கருக்கு மிகாத புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு
18 முதல் 65 வயது வரை விவசாயம் சார்ந்த தொழில்களான தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, உள்நாட்டு மீன்பிடி தொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்
குடும்ப அட்டை (முக்கியம்), ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நிலம் வைத்திருப்பவர்கள் – பட்டா / சிட்டா நகல்.

விண்ணப்பிக்கும் முறை
கிராம நிர்வாக அலுவலர் (VAO) மூலம் விண்ணப்பிக்கலாம், VAO-விடம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்குப் பிறகு, வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கப்படும்.

சிறப்பு தகவல்
மாவட்டம் தோறும் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்களில் பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!

MUST READ