Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயருகிறதா? வணிகவரித்துறை அனுப்பிய 'டாப் சீக்ரெட்' பரிந்துரை!

டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயருகிறதா? வணிகவரித்துறை அனுப்பிய ‘டாப் சீக்ரெட்’ பரிந்துரை!

-

- Advertisement -

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் செஸ் (உபரி) வரி வசூலிப்பது குறித்து வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயருகிறதா? வணிகவரித்துறை அனுப்பிய 'டாப் சீக்ரெட்' பரிந்துரை!​நீதிமன்ற உத்தரவின்படி, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் விரிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

​அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, காலி மதுபாட்டில்களை நுகர்வோரிடமிருந்து திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், தற்போது தனியாக வசூலிக்கப்பட்டு வரும் 10 ரூபாயை, இனிவரும் காலங்களில் மதுபாட்டிலின் அசல் விலையுடனேயே சேர்த்து வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மதிப்பு கூட்டப்பட்ட வரி சட்ட விதிகளில் (VAT Act Rules) தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

we-r-hiring

​உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
மேலும், காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறுவது, அவற்றை முறையாக மறுசுழற்சி (Recycling) செய்வது போன்ற முழுப் பொறுப்புகளையும், சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே (Distilleries) ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் காலி பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது.

​6 வாரங்களுக்கு வழக்கு ஒத்திவைப்பு
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த புதிய திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. ​அரசின் இந்த புதிய பரிசீலனை சட்ட வடிவம் பெறும் பட்சத்தில், டாஸ்மாக் மதுபானங்களின் விலையில் மாற்றம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக vs தவெக.. “அவங்க ஏன் எங்ககிட்ட வராங்க?”.. அன்பழகன் கேள்விக்கு மேடையிலேயே தெறிக்கவிட்ட புஸ்ஸி ஆனந்த்!

MUST READ