Homeசெய்திகள்தமிழ்நாடு"வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் நீதிமன்றம் சென்ற விஜய் தான் நாட்டின் தீய சக்தி!" –...

“வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் நீதிமன்றம் சென்ற விஜய் தான் நாட்டின் தீய சக்தி!” – அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கடும் தாக்கு!

-

- Advertisement -

“வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் வாங்கி அதற்கு முறைப்படி வரி கட்டாமல் நீதிமன்றத்திற்குச் சென்றவர்தான் தற்போதைய முதலமைச்சர் விஜய். இந்த நாட்டிற்கு உண்மையான தீய சக்தி அவர்தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்."வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் நீதிமன்றம் சென்ற விஜய் தான் நாட்டின் தீய சக்தி!" – அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கடும் தாக்கு!

​சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் 316-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

we-r-hiring

​”20,000 கோடி அடிக்கவே விஜய் அரசியலுக்கு வந்தார்”
​முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திராவிடக் கட்சிகளைத் ‘தீய சக்தி, கூட்டுக்களவாணி’ என விஜய் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த சண்முகநாதன், “கூட்டுக்களவாணி, தீய சக்தி எல்லாமே விஜய் தான். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் வெளிநாட்டிலிருந்து கார் வாங்கி வந்து, அதற்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் நீதிமன்றத்திற்குச் சென்றவர் அவர். அப்படியிருக்க யார் நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்? யார் தீய சக்தி?” . ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் ₹250 கோடி வருமானம் என்கிறார். ₹100 டிக்கெட்டை ₹1000, ₹2000 என விற்பனை செய்து சம்பாதித்த பணம்தானே அது? ₹250 கோடி பட்ஜெட் படத்தை விட்டுட்டு அரசியலுக்கு வந்திருப்பது ₹20,000 கோடி அடிப்பதற்காகத்தான்.”

​”தவெக ஆட்சியில் தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் எம்.எல்.ஏக்கள்”
​”எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என விஜய் கூறுகிறார். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் டெண்டர்களுக்காகத் தெருத்தெருவாக பிச்சை எடுத்து அலைகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து, கான்ட்ராக்டர்களைத் தங்களை வந்து பார்க்க வைக்கிறார்கள். திருவைகுண்டம் எம்.எல்.ஏ நுகர்வோர் வாணிபக் கழகத்திற்குச் சென்று டயர்களைப் பார்க்கிறார் என்றால், அந்த கான்ட்ராக்ட் காரர் யார் என்று கண்டுபிடிப்பதற்காகத்தான்.” ​”முன்னாள் முதல்வர் எடப்பாடியார் சிறப்பாகக் குடிமராமத்து பணிகளைச் செய்து ‘குடிமராமத்து நாயகன்’ என்று பெயர் பெற்றார். ஆனால், இப்போது ஊழலற்ற ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, குளத்தில் வண்டல் மண் எடுத்தால் கூட அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-க்களுக்கு ₹300 கொடுக்க வேண்டியுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம் என எந்த இடத்தில் ஊழல் நிற்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

"வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் நீதிமன்றம் சென்ற விஜய் தான் நாட்டின் தீய சக்தி!" – அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கடும் தாக்கு!

​”முழுமையாக வெல்லாத விஜய், ஸ்டாலின் வீட்டிற்குப் போனது ஏன்?”
​மக்களால் திராவிடக் கட்சிகள் விரட்டப்பட்டுவிட்டன என்ற விஜய்யின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த அவர், ​”விஜய் இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் நிற்கக் கூட தகுதி இல்லாமல், பயந்து போய் இரண்டு தொகுதிகளில் நின்றார். 234 இடங்களிலும் போட்டியிட்டு வெறும் 108 இடங்களில்தான் தவெக வெற்றி பெற்றுள்ளது. இது மூன்றில் ஒரு பங்குதான். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அவரை ஆதரிக்கவில்லை. 108 தொகுதிகளில் மட்டும் வென்றுவிட்டு, ஆட்சி அமைப்பதற்காக ஆதரவு கேட்டு ஸ்டாலின் வீட்டிற்கு எதற்காகப் போனார்? ஆதரவு வாங்கிவிட்டு இப்போது வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது அரசியல் நாகரிகம் கிடையாது. இது ஒரு முதலமைச்சருக்கான பேச்சே அல்ல. அவர் ஒவ்வொரு கட்சியிடமும் போய் பிச்சைதான் எடுத்திருக்கிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதன்முதலில் 130 இடங்களில் தனித்து வென்று ஆட்சியைப் பிடித்தார். விஜய்யால் எம்.ஜி.ஆரை மிஞ்ச முடியாது.”

​”அதிமுகவில் மூட்டை மூட்டையாகப் பணம் கட்டியவர்கள்தான் தவெகவில் உள்ளனர்”
​கரூரில் நடந்த தவெக நிகழ்ச்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘எம்.ஜி.ஆரின் அன்பையும் ஜெயலலிதாவின் வீரத்தையும் விஜயிடம் பார்க்கிறேன்’ என்று கூறியது குறித்துக் கேட்டதற்கு, ​”அவருக்கு மட்டும்தான் அப்படித் தெரிந்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மூட்டை மூட்டையாகப் பணத்தைச் சம்பாதித்துக் கட்டியவர்கள்தான் இப்போது தவெகவிற்குப் போயிருக்கிறார்கள். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. பொதுச்செயலாளர் பதவியைப் பறிக்க வேண்டும், முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசையில் கட்சியை உடைக்க நினைத்த விஜயபாஸ்கர் போன்றவர்கள்தான் அங்கிருந்து போயிருக்கிறார்கள்.”

​மீண்டெழும் அதிமுக; எடப்பாடியாரே மக்களின் தலைவர்!
​அதிமுகவின் தொடர் தோல்விகள் மற்றும் புதிய கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த சண்முகநாதன், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் கடந்த காலங்களில் ஆட்சியை இழந்து தோற்றிருக்கிறார்கள். ஆனால், மீண்டும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் தொண்டர்கள் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள். தற்பொழுது பிரிந்து போயிருப்பவர்களில் யாருக்காவது பொதுச்செயலாளர் ஆகும் தகுதி இருக்கிறதா? அது எடப்பாடியாருக்கு மட்டும்தான் இருக்கிறது. அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மக்களின் முதல்வராகவும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் என்றும் விளங்குகிறார்” என்று உறுதியுடன் கூறினார்.

“விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர்”: மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

MUST READ