HomeBreaking Newsகரூருக்கு ஒரு நீதி... மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் 'பணி ஆணை'...

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசின் இந்தத் தவறான நிர்வாக முடிவை, தீர்க்கமான அரசியல் சிந்தனை கொண்ட திருமாவளவன் போன்ற முதிர்ந்த தலைவர்கள் ஆதரிப்பது முற்றிலும் தவறானது என்று கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.கரூருக்கு ஒரு நீதி... மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் 'பணி ஆணை' அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

​சொந்த நிதியா? மக்களின் வரிப்பணமா?
​முதலமைச்சர் விஜய், தம்மைக் காண்பதற்காக வந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ நினைத்தால், அதைத் தனது சொந்தப் பணத்திலோ அல்லது கட்சி நிதியிலிருந்தோ தாராளமாகச் செய்திருக்கலாம். அதை விடுத்து, பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ‘அரசு வேலை’யை இதற்குப் பரிசாக அள்ளித் தருவது மிகத் தவறான முன்னுதாரணம் ஆகும். ​மேலும், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக இன்னும் வழக்கு விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. அதற்குள், “இதற்குக் காவல்துறைதான் காரணம்” என்பதை மக்கள் மத்தியில் நிலைநிறுத்துவதற்காகவே, அவசர அவசரமாக இந்த அரசுப் பணி ஆணைகளை முதலமைச்சர் விஜய் அள்ளி வீசியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

we-r-hiring

​விக்கிரவாண்டி, மதுரை உயிரிழப்புகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
​தவெக-வின் இந்த நடவடிக்கை, “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

​விக்கிரவாண்டி மாநாடு: தவெக தொடங்கப்பட்ட புதிதில் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட மாநாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

​மதுரை மாநாடு: மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் 18 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

கரூருக்கு ஒரு நீதி... மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் 'பணி ஆணை' அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

​விடைதெரியா கேள்வி: இந்த விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இதுவரை தவெக அரசு கண்டுகொள்ளாதது ஏன்? அவர்களுக்கு ஏன் அரசுப் பணி ஆணை வழங்கப்படவில்லை? ​கரூரில் நடந்த உயிரிழப்புகளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, அங்குள்ள மக்கள் மீது அனுதாபம் இருப்பது போல் தவெக நாடகமாடுகிறது என்றும், மற்ற இடங்களில் இறந்தவர்களின் குடும்பங்களைக் கைவிட்டது ஏன் என்றும் தவெக அரசு மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.

​திருமாவளவன் இதற்குப் பதில் சொல்வாரா?
​தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் குழப்பமான சூழல்களிலும், தவெக உடனான கூட்டணி விவகாரங்களிலும் திருமாவளவன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாலும், அவரிடம் ஒரு கொள்கை சார்ந்த தீர்க்கமான அரசியல் சிந்தனை இருக்கிறது என்ற மதிப்பு பொதுவெளியில் கடந்த இருபதாண்டுகளாக இருந்து வருகிறது. ​ஆனால், விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இறந்தவர்களைக் கண்டுகொள்ளாமல், கரூரில் இறந்தவர்களை மட்டும் அரசியலாக்கி அரசு வேலை வழங்கும் விஜய்யின் இந்த இரட்டை நிலைப்பாட்டைத் திருமாவளவன் எதன் அடிப்படையில் நியாயப்படுத்துகிறார்? குறுகிய கால அரசியல் இலக்குகளுக்காகத் தவெக அரசின் இத்தகைய தவறான செயல்பாடுகளைத் திருமாவளவன் ஆதரிப்பது அவருடைய நற்பெயரையே கெடுத்துவிடும். இந்தத் பாகுபாட்டு அரசியலைத் திருமாவளவன் நியாயப்படுத்துவாரா என்பதே நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

MUST READ