spot_imgspot_img
Homeசெய்திகள்”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை

-

- Advertisement -

ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்”  என சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளாா். ”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரைசேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடைபெற்றது.  தவெக நிர்வாகிள் மத்தியில், பிரசார வேனில் நின்றபடி கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது, “ஏய் விஜய் வீட்டு விட்டு வெளியே வா” என சொல்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என தெரியுமா என விஜய் கேள்வி எழுப்பியுள்ளாா். தாய் நாடான தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலமாக இருக்கலாம் ஆனால் தனக்கு அதுதான் வீடு என்ற அவர், 8 கோடி மக்கள் தன்னுடைய குடும்பத்தினர் எனவும் தெரிவித்துள்ளாா். மேலும் தமிழ்நாட்டின் முதல் படைவீரனாக, பாதுகாவலனாக மக்களுடன் நிற்கவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அனைத்து தலைவர்களுக்கும் Standard Operating Procedure என்ற SOP வழங்கப்படுகிறது. ஆனால், தனக்கு ஸ்டாலின் சார் ஆப்ரேட்டிங் ப்ரோசீஜர் ஆக உள்ளது என்ற விஜய் தெரிவித்துள்ளாா். மக்ளளைச் சந்திக்கவே அரசு அனுமதி மறப்பதாக குற்றஞ்சாட்டிய  அவர், தன்னை நேசித்த தமிழக மக்களுக்காக நீதி கேட்டே அரசியலுக்கு வந்ததாகவும் கூறியுள்ளாா். மக்களிடம் நீதி கேட்காமல் யாரிடம் சென்று நீதி கேட்பது என்றும் தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

காசு கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என்ற கணக்கு, தன்னுடைய வருகைக்கு பிறகு வேலைக்கு ஆகாது என விஜய் கூறியுள்ளாா். தேர்தலுக்காக கொடுக்கும் பணத்தை சந்தோஷமாக வாங்கிக் கொள்ளங்கள் அது உங்கள் பணம் தான் என்ற அவர், வாங்கிவிட்டு அவர்களின் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள் என கிண்டலடித்துள்ளாா். மேலும், பணத்தை கொடுத்தால் ஏமாறக்கூடாது எனவும், இதற்கு எதிராக உறுதிமொழி எடுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளாா்.

மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்ற 1% வாக்கு வாங்க முடியுமா என விஜய் சவால் விட்டிருக்கிறாா். தன்னை அனுபவமில்லாதவர் என கூறுவதற்கு பதிலடி கொடுத்த அவர், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பத்தில் தங்களுக்ளு அனுபவமில்லை என்றாா். மேலும், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதன்மையான சக்தியாக மாறி,30% -திற்கு மேல் மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தவெகவிற்கு அனுபவமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தொடர்ந்து பேசிய அவர், நடைமுறைக்கு ஒத்துவராத வாக்குறுதிகளை என்றுமே வழங்க மாட்டேன் என விஜய் தெரிவித்துள்ளாா். மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவது தனது முதல் வாக்குறுதி என்றம் அவர் கூறியுள்ளாா். அத்துடன், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்ற வருவதாகவும், விரையில் அனைவருக்குமான அறிக்கையாக அது அமையும் என்றும் விஜய் உறுதியளித்துள்ளாா். ஏற்கெனவே, பைக், வீடு என தவெக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் தான் கட்சி ஆரம்பித்ததாக விஜய் தெரிவித்தார். தனக்காக பெற்றோர்களிடம் சிறுவர்கள் வாக்கு சேகரிக்கும்படி அறிவுவுத்தியுள்ளா். மேலும், யார்மீதும் தனிப்பட்ட வன்மமோ, கோபமோ இல்லை எனவும், தேர்தல் ஜெயித்து மக்களுக்கான நன்றிக் கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்திருப்பதாகவும் கூறினாா்.

நான்கரை வருடங்களுக்கு பிறகு, உங்கள் கனவுகளை சொல்லுங்கள், என்று திமுக அரசு ஒவ்வொருவரின் வீட்டுக் கதவை தட்டுகிறது என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளாா். ஆனால், உண்மையான மக்களின் கனவு என்னவென்றால், பாதுகாப்பில்லாத மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் என தெரிவித்தாா். எனவே, 100%  தூய சக்தியான தவெக நேர்மையான ஆட்சியை கொடுக்கும், இந்த விஜய் அந்த ஆட்சியை வழங்குவேன் எனக் கூறினாா்.

மேலும், “இரண்டு அணிகளுக்கிடையேதான் போட்டி ஒன்று தி.மு.க, மற்றொன்று த.வெ.க” என அரசியல் நிலைப்பாட்டை விளக்கிய அவர், மக்களுடன் இணைந்து வெற்றி பெறுவோம் என உறுதியளித்தார். மொத்தத்தில், இந்த உரையில் விஜய் தனது அரசியல் நோக்கம் அதிகாரப் போட்டி அல்ல; மக்களுக்கான மாற்றமே குறிக்கோள்” என விஜய் வலியுறுத்தினார்.

ஸ்டாலின் தான் Boss! தெளிவான ரூட்டில் திமுக! ராகுல் சொன்ன முக்கியத் தகவல்! ரகசியம் உடைத்த கான்ஸ்டன்டைன்!

 

MUST READ