கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் அதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரம் தமிழக அரசியல் களத்தில் இன்னும் தணியாத நிலையில், இவ்விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோ விளக்கம் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் இந்த அரசியல் நகர்வுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள உத்திகள் குறித்து அரசியல் விமர்சகர் ‘துக்ளக்’ ரமேஷ் தனது துல்லியமான அலசலை முன்வைத்துள்ளார்.
’கரூரில் மட்டும் ஏன்?’ – விஜய் எழுப்பிய சதித் திட்டம் குறித்த சந்தேகம்
ஐந்து மாவட்டங்களில் தவெக தொடர் பரப்புரைகளை நடத்திய போதும், கரூரில் மட்டுமே இப்படி ஒரு அசம்பாவிதம் ஏன் நடந்தது என்ற கேள்வியை விஜய் தனது வீடியோவில் எழுப்பியுள்ளார். மேலும், “இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன, மக்களுக்கு உண்மை தெரியும்” என்றும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டியுள்ள துக்ளக் ரமேஷ், விஜய் இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுக-வை நேரடியாகக் குறிவைக்கிறார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார். அரசு தரப்பில் தவெக கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படவில்லை அல்லது திட்டமிட்டு நெரிசல் உருவாக்கப்பட்டது போன்ற ஒரு மறைமுக பிம்பத்தை விஜய் உருவாக்க முயல்கிறார் என்றும், ஆளுங்கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கரூரில், தனது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க ‘அரசியல் சதி’ ஏதேனும் பின்னணியில் இருக்கிறதா என்ற புதிய கோணத்தை விஜய் அவிழ்த்து விட்டுள்ளதாக ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

’என்னை பழிவாங்குங்கள்’ – விஜய்யின் புதிய அரசியல் வியூகம்
வீடியோவில் விஜய் பேசும்போது, “சி.எம் சார்… என் மீது கோபமிருந்தால் என்னை பழிவாங்குங்கள், என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்” என்று தமிழக முதலமைச்சரை நோக்கி நேரடியாகப் பேசியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துக்ளக் ரமேஷ், இது சாதாரண எமோஷனல் பேச்சு அல்ல என்றும், இதன் பின்னணியில் ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் வியூகம் ஒளிந்திருக்கிறது என்றும் கணித்துள்ளார். இதன் மூலம் ஆளுங்கட்சிக்கும் தமக்கும் இடையேயான அரசியல் யுத்தத்தை விஜய் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
