Homeசெய்திகள்உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

உட்பிரிவுடன் (Sub-division) கூடிய பட்டா மாறுதலுக்கான நில அளவை மற்றும் ஆய்வுப் பணிகள் இனி முழுமையாக ஆன்லைன் (Online) முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தமிழக நில அளவைத்துறை அறிவித்துள்ளது.உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான நிலம் தொடர்பான சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில், உட்பிரிவுடன் (Sub-division) கூடிய பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை இனி முழுமையாக ஆன்லைன் முறையில் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என நில அளவைத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, உட்பிரிவு தேவைப்படும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் தளத்தின் மூலமே ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும், நிலத்தை அளந்து அறிக்கை தயாரித்தல், வரைபடம் வரைவது உள்ளிட்ட பணிகளுக்கான ஆவணங்களை கையால் (Manual) தயாரிக்கும் நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

நில அளவையாளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் (Laptop) மூலமாக மட்டுமே நில அளவீடு தொடர்பான அறிக்கைகள் மற்றும் வரைபடங்களை ஆன்லைனில் பதிவேற்றி செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையின் மூலம் விண்ணப்பங்களின் செயல்பாட்டு காலம் குறைக்கப்பட்டு, இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு 30 நாட்களுக்குள் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் பெறும் வசதி ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நில ஆவண சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, பொதுமக்களுக்கு விரைவான மற்றும் எளிமையான சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை

MUST READ