Homeசெய்திகள்ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை

-

- Advertisement -

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க, பயனர்களின் அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்களையும் ஒரே கிளிக்கில் உடனடியாக முடக்கும் ‘கில் ஸ்விட்ச்’ (Kill Switch) வசதியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகம் செய்துள்ளது. மொபைல் பேங்கிங் ஆப், எஸ்எம்எஸ் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் இந்த சுவிட்சை இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய பாதுகாப்பு அம்சமான ‘கில் ஸ்விட்ச்’வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மே 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் இந்த முக்கிய தகவல் இடம்பெற்றுள்ளது.

we-r-hiring

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் பணப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய பாதுகாப்பு வசதி கொண்டு வரப்படுகிறது. இந்த ‘கில் ஸ்விட்ச்’ வசதியின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் அல்லது மோசடிகள் நடப்பதாக உணர்ந்தால், ஒரே கிளிக்கில் அனைத்து டெபிட் பரிவர்த்தனைகளையும் தற்காலிகமாக முடக்க முடியும். இதனால் கணக்கிலிருந்து பணம் வெளியேறுவதை உடனடியாகத் தடுக்க முடியும்.

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை

தற்போது இதுபோன்ற வசதி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு பரிவர்த்தனைகளை தேவைக்கேற்ப செயல்படுத்தவோ அல்லது முடக்கவோ முடியும். இதேபோன்ற பாதுகாப்பு அம்சத்தை அனைத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்களுக்கும் விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது.

மேலும், யூபிஐ (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் பெரிய தொகை பரிவர்த்தனைகள் மீதும் ரிசர்வ் வங்கி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, ஒருவர் முதன்முறையாக மற்றொருவருக்கு பெரிய தொகையை அனுப்பும்போது, பரிவர்த்தனையில் சிறிய காலதாமதம் ஏற்படுத்தும் நடைமுறையையும் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனைகளை அவை நிறைவடைவதற்கு முன்பே கண்டறிந்து தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெலிஜென்ஸ் பிளாட்ஃபார்ம் (DPIP) என்ற புதிய அமைப்பையும் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட இந்த அமைப்பு, நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இடர் மதிப்பெண் வழங்கும். இதன் மூலம் சந்தேகத்திற்கிடமான அல்லது மோசடியான பரிவர்த்தனைகளை விரைவாக அடையாளம் காண முடியும்.

ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை

ஒரு வங்கி ஆய்வின் படி, இந்தியாவில் 52 சதவீத மக்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 67 சதவீத வணிகர்களின் வர்த்தக வளர்ச்சிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதனால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

MUST READ