Homeசெய்திகள்சென்னைசென்னை பயணிகள் கவனத்திற்கு - ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின்...

சென்னை பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

-

- Advertisement -

சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பை சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை மொத்தம் 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சென்னை பயணிகள் கவனத்திற்கு - ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

அதன்படி, அரக்கோணம் – திருத்தணி இடையே அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், திருத்தணி – அரக்கோணம் இடையே இரவு 9.15 மணி மற்றும் 11.10 மணிக்கு இயக்கப்படும் ரெயில்கள், மேலும் திருத்தணி – சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.03 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் உள்ளிட்ட 5 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

we-r-hiring

மேலும், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் ரெயில், ஆவடி – அரக்கோணம் இடையே காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் ரெயில் மற்றும் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே பல்வேறு நேரங்களில் இயக்கப்படும் 21 மின்சார ரெயில்கள் அரக்கோணம் – திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன.

காலை 6.30 மணி, 9.10 மணி, 10.30 மணி, 11 மணி, 12.40 மணி, மதியம் 1.25 மணி, பிற்பகல் 3.45 மணி, மாலை 4.45 மணி, 5.15 மணி, 5.45 மணி, 6.05 மணி, 6.40 மணி, இரவு 7.30 மணி, 7.45 மணி, 8.20 மணி, 9.10 மணி, 10 மணி மற்றும் 10.55 மணிக்கு இயக்கப்படும் ரெயில்களும் இந்த பகுதி ரத்து நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் மொத்தம் 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், திருத்தணி – சென்னை சென்ட்ரல் இடையே ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்களில் பயணம் மேற்கொள்ளும் புறநகர் ரெயில் பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத் திட்டங்களை சரிபார்த்து, மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு சென்னை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாய்மொழியும் ஆங்கிலமும் கற்றால் அறிஞராகவும் மேதையாகவும் உயரலாம் – பா.சிதம்பரம் வலியுறுத்தல்

MUST READ