Homeசெய்திகள்அரசியல்தேர்தல் வாக்குறுதியில் 'ஒவ்வொரு மாதம்'.. அரசாணையில் 'இரு மாதம் ஒருமுறை'! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே...

தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?

-

- Advertisement -

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, தனது முதல் திட்டத்திலேயே வார்த்தை ஜாலங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

வாக்குறுதி என்ன?

we-r-hiring

தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றி கழகம் வெளியிட்ட 95 பக்க தேர்தல் அறிக்கையில், “60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்” என மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், தவெக-வின் வெற்றிக்கும் முக்கியக் காரணியாக அமைந்தது.

தற்போதைய சர்ச்சை
இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது முதல் கோப்பாக “மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தில் கையெழுத்திட்டார். ஆனால், அதன்பின் வெளியான அதிகாரப்பூர்வ அரசாணையில், “இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.5,000 வழங்கப்படும்” என மாற்றப்பட்டுள்ளது.

தொகை கணக்குப்படி மாதத்திற்கு ரூ.2,500 என்பது சரியாக இருந்தாலும், “ஒவ்வொரு மாதமும்” என்ற வாக்குறுதி சிதைக்கப்பட்டிருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.

மக்களும் எதிர்க்கட்சிகளும் சொல்வது என்ன?

  • “மாதம் தோறும் கையில் பணம் கிடைத்தால் மட்டுமே அன்றாடச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்பது நடைமுறைக்கு ஒத்து வராது,” எனப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • “ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ஒன்று பேசிவிட்டு, வந்தவுடன் மாற்றிக் கூறுவதுதான் இவர்களின் ‘நேர்மை’ அரசியலா? முதல் கையெழுத்திலேயே ஏமாற்றம் தொடங்கிவிட்டது” என அதிமுக மற்றும் திமுக தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

  •  நிர்வாக வசதிக்காகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மொத்தமாகப் பெரிய தொகை சேர்வதை உறுதி செய்யவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தவெக தரப்பில் கூறப்படுகிறது.

    “ஸ்டாலின் சார் போல மக்களை ஏமாற்ற மாட்டோம்” என்று பிரசாரத்தில் முழங்கிய முதல்வர் விஜய், தற்போது இந்த “இரு மாத இடைவெளி” சர்ச்சையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதே அரசியல் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாபிக்.

MUST READ