Homeசெய்திகள்ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்... நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் 'மாபெரும்...

ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்… நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் ‘மாபெரும் சதி’?

-

- Advertisement -

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, அதிலுள்ள சமூக அநீதிகளையும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஆபத்துகளையும் தமிழ்நாடு தொடர்ந்து எச்சரித்து வந்தது. அன்று தமிழ்நாடு எழுப்பிய கேள்விகளை, இன்று தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுப் புகார்களால் இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களும் கல்வியாளர்களும் உணரத் தொடங்கியுள்ளனர்.ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்... நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் 'மாபெரும் சதி'?

 

we-r-hiring

நீட் – வெறும் தேர்வல்ல, அரசியல் திசையைக் காட்டும் கருவி
நீட் தேர்வு என்பது வெறும் மருத்துவச் சேர்க்கைக்கான தேர்வு முறை மட்டுமல்ல; அது கல்வி, மாநில உரிமை, சமூகநீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை யார் தீர்மானிப்பது என்ற ஆழமான அரசியல் கேள்விகளை எழுப்பும் ஒரு கருவியாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானது மட்டுமல்ல, நூற்றாண்டு காலமாகப் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்த்திய சமூக மாற்றத்திற்கான ஆயுதம்.

சமமற்ற சமூகத்தில் ‘ஒரே தேர்வு’ நீதியாகாது
“ஒரே நாடு – ஒரே தேர்வு” என்ற வாதம், வாய்ப்புகள் சமமாக இல்லாத சமூகத்தில் நீதியை வழங்காது. பல லட்சம் ரூபாய் செலவழித்துத் தனியார் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவரையும், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவரையும் ஒரே அளவுகோலில் மதிப்பிடுவது சமத்துவமாகாது. இது ஏற்கனவே முன்னிலை பெற்றவர்களின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகவே அமையும்.

பயிற்சி மையங்களின் ஆதிக்கமும் கூட்டாட்சிப் பறிப்பும்
நீட் தேர்வின் வருகையால் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் குறைந்து, பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கல்வி ஒரு உரிமையிலிருந்து சந்தைப் பொருளாக மாறியுள்ளது. மேலும், மாநிலங்களின் அனுபவத்தைப் புறக்கணித்து, டெல்லியில் இருக்கும் அதிகார மையம் அனைத்தையும் தீர்மானிப்பது ஜனநாயக மாண்பிற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிக்கை
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் உரிமை தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்க வேண்டும். எனவே, நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட தேர்வுகளை மீளாய்வு செய்வதோடு, கல்வியை மீண்டும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு தேர்வுக்கு எதிரானது மட்டுமல்ல; அது சமூகநீதி, மாநில சுயாட்சி மற்றும் பொதுக் கல்வியைப் பாதுகாப்பதற்கான ஜனநாயகப் போராட்டம் என்றும், தமிழ்நாட்டின் இந்த எச்சரிக்கை இன்று தேசிய அளவில் கூட்டாட்சிக் கோரிக்கையாக உருவெடுத்துள்ளது என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                    ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்... நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் 'மாபெரும் சதி'?                                                                                                                                                                                                                      கட்டுரையாளர்                                                                                                                  சு. ஆதவன்

 

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

MUST READ