spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபுத்தாண்டு முதல் அமலாகும் அதிரடி மாற்றங்கள்…வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை…

புத்தாண்டு முதல் அமலாகும் அதிரடி மாற்றங்கள்…வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை…

-

- Advertisement -

2026 முதல் வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை பல்வேறு அதிரடியான மாற்றங்கள் அமலுக்கு வரவிருக்கின்றன.புத்தாண்டு முதல் அமலாகும் அதிரடி மாற்றங்கள்…வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை…

இந்தியாவில் புத்தாண்டு தொடங்கியதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் குறிப்பாக வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பல புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் நமது நிதி திட்டமிடலை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

we-r-hiring

வங்கி கணக்குகளுக்கு ஆண்டுதோறும் KYC புதுப்பிப்பு கட்டாயம்

இன்றைய சூழலில் இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் மிகக் குறைவு. 2026 ஆம் ஆண்டு முதல், வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக KYC (Know Your Customer) விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் அரசு சார்ந்த பணப்பரிவர்த்தனைகள் தடையின்றி நடைபெறவும், KYC புதுப்பிப்பு அவசியமாகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் KYC புதுப்பிக்கத் தவறினால், வங்கி கணக்கு முடக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PF கணக்கிலிருந்து ATM மூலம் பணம் எடுக்கும் வசதி

வேலைக்கு செல்லும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டமாக EPFO (Employees’ Provident Fund Organisation) செயல்பட்டு வருகிறது. இதுவரை PF கணக்கிலிருந்து பணம் எடுக்க இணையதளம் மூலமாக விண்ணப்பித்து, அதிகாரிகளின் அனுமதி பெற்ற பிறகே பணம் கிடைக்கும் நிலை இருந்தது. இந்த நடைமுறைக்கு குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும்.

ஆனால், 2026 ஆம் ஆண்டு முதல் PF கணக்கில் உள்ள தொகையை ATM வாயிலாக நேரடியாக எடுத்து பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அவசர தேவைகளுக்கு PF தொகையை எளிதாக பயன்படுத்த முடியும்.

அரசு சேவைகளுக்கு ஒரே ஒருங்கிணைந்த தளம்

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், பலருக்கும் இந்த திட்டங்கள் குறித்த முழுமையான தகவல் இல்லாததால், அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது தொடர்கிறது.

இந்த நிலையை மாற்றும் வகையில், அனைத்து அரசு நலத்திட்டங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தளம் செயல்பாட்டுக்கு வந்தால், ஒருவருக்கு எந்தெந்த அரசு திட்டங்கள் பொருந்தும், அவற்றுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட் மின் மீட்டர் பயன்பாடு

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, பல்வேறு நகரங்கள் மற்றும் வீடுகளில் ஸ்மார்ட் எலெக்ட்ரிசிட்டி மீட்டர்கள் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் செயல்பாட்டுக்கு வந்தால், வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதனை நிகழ்நேரத்தில் (Real Time) தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், செலவுகளை திட்டமிடவும் உதவும் என கூறப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

நாடு முழுவதும் நிதி சார்ந்த ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கி வருகின்றன.

2026 ஆம் ஆண்டு முதல், அனைத்து விதமான டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கும் Two-Step Verification கட்டாயமாக்கப்பட உள்ளது. அதன்படி, பின் நம்பர் அல்லது பாஸ்வோர்டுடன் கூடுதலாக OTP (One Time Password) உள்ளிட்ட கூடுதல் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னரே பரிவர்த்தனை நிறைவேறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

மொத்தத்தில், 2026 ஆம் ஆண்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், நிதி பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

MUST READ