Homeசெய்திகள்சென்னைசென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

-

- Advertisement -

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை

we-r-hiring

13 மணி நேர மின்தடை
​சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை, எல்லையம்மன் காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் வராததால், அனல் காற்று மற்றும் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

தூக்கமின்றி தவித்த குழந்தைகள், முதியவர்கள்
​இந்த நீண்ட நேர மின் துண்டிப்பால், அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பரிதவித்தனர். மேலும், இன்று காலை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய மாணவ, மாணவிகளும் முறையான தூக்கம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம்
​இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து, தொடர்ந்து பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் அளித்து 12 மணி நேரத்திற்கும் மேலாகியும் மின்சார வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது வரை மின் விநியோகம் சீரமைக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.

​பொதுமக்கள் கோரிக்கை:
“குழந்தைகளும், உடல்நிலை சரியில்லாத முதியவர்களும் இரவு முழுவதும் தூங்காமல் தவித்து வருகின்றனர். மின்சார வாரியம் உடனடியாக தலையிட்டு, இந்த மின்தடையை நீக்கி மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ