Homeசெய்திகள்சென்னைஎழும்பூர் மருத்துவமனை - முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: "பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்"...

எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!

-

- Advertisement -

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் நிலவும் சூழல் குறித்தும், ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.எழும்பூர் மருத்துவமனை - முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: "பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்" - அமைச்சர் எச்சரிக்கை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு இன்று நேரில் வருகை தந்து, அங்குள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். நீண்ட நாட்களாகவே இந்த மருத்துவமனையைப் பார்வையிட வேண்டும் என்று முதலமைச்சர் விருப்பம் கொண்டிருந்த நிலையில், இன்று இந்த ஆய்வு நடைபெற்றது. ​ஆய்வின் போது, வார்டுகளுக்குச் சென்ற முதலமைச்சர், அங்கு அண்மையில் பிறந்த குழந்தைகளைத் தன் கைகளில் ஏந்தி, அன்போடு கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், பிரசவித்த தாய்மார்களிடம் மருத்துவமனையின் சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.எழும்பூர் மருத்துவமனை - முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: "பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்" - அமைச்சர் எச்சரிக்கை!

we-r-hiring

முதலமைச்சரின் இந்த ஆய்வைத் தொடர்ந்து, மருத்துவமனையின் இணை இயக்குநரிடம் ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ​”பிரசவ வார்டுகளில் குழந்தையைப் பார்ப்பதற்காகப் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் ஊழியர்கள் பணம் வாங்கும் குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இதனை நாம் ஒற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. ​மருத்துவமனையில் இனி எந்தவொரு ஊழியராவது நோயாளிகளிடமோ, அவர்தம் உறவினர்களிடமோ பணம் கேட்டால், அவர்கள் தற்காலிக நீக்கம் அல்ல, உடனடியாகப் பணியில் இருந்தே நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்படுவார்கள் என்பதுதான் தற்போதைய கடுமையான உத்தரவு.”

எழும்பூர் மருத்துவமனை - முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: "பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்" - அமைச்சர் எச்சரிக்கை!

​புகார் அளிக்க ‘104’ எண்கள்
தொடர்ந்து பேசிய அமைச்சர், மருத்துவமனை ஊழியர்கள் யாராவது பணம் கேட்டாலோ அல்லது பணம் தருமாறு வற்புறுத்தினாலோ, பொதுமக்கள் உடனடியாக ‘104’ என்ற உதவி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், அந்தப் புகாரின் மீது உறுதியாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

MUST READ