Homeசெய்திகள்சென்னைரூ.600 கோடி மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவின் கூட்டாளி சுதிர் சங்கரின்...

ரூ.600 கோடி மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவின் கூட்டாளி சுதிர் சங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

-

- Advertisement -

மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளி தேவநாதன் யாதவின் கூட்டாளியான சுதிர் சங்கரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மைலாப்பூர்

சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுதிர் சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நான் நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வருகிறேன். இந்த நிதி நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பு வகித்ததைத் தவிர, நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

we-r-hiring

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சி. குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வைப்பீட்டாளர்கள் தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, சுதிர் சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மிகக் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தார்.

அவர் தனது வாதத்தில், “சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக இயங்கி வந்த ஒரு நிதி நிறுவனத்தை இக்கூட்டணியினர் திட்டமிட்டு திவாலாக்கியுள்ளனர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரமான ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையும் இவர்கள் சூறையாடியுள்ளனர். மேலும், நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த 100 கோடி ரூபாய் டெபாசிட் என்ற நிபந்தனையையும் இவர்கள் இதுவரை நிறைவேற்றவில்லை” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி. குமரப்பன், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சுதிர் சங்கரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

MUST READ