Homeசெய்திகள்சென்னைவீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!

வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!

-

- Advertisement -

சென்னை ராமாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் முன்பாக மதுபோதையில் காரில் வந்து பாட்டுப் பாடி ரகளையில் ஈடுபட்டதைக் கண்டித்த ஆட்டோ ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கி, அவரது வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகி உட்படப் பலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.​வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!சென்னை ராமாபுரம், பூத்தப்பேடு ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் முன்பாக காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், காரின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு, அதிக சத்தத்துடன் சினிமா பாடல்களைப் ஒலிக்கவிட்டு, மதுபோதையில் நடுரோட்டில் நடனமாடி கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ​சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து, நள்ளிரவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் ரகளையில் ஈடுபடக் கூடாது என அவர்களைக் கண்டித்துள்ளார்.

மணிகண்டன் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பல், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது. மேலும், மணிகண்டனின் வீட்டின் மீதும் அந்த கும்பல் கற்களைக் கொண்டு சரமாரியாக வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அக்கும்பல், உடனடியாகத் தங்களின் காரில் ஏறி அங்கிருந்து தப்பியோடிவிட்டது. ​இத்தாக்குதலில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத்  தாக்கிய தவெக நிர்வாகி கைது!இச்சம்பவம் குறித்து ராமாபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனைத் தாக்கியது அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகியான பிரீத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் என்பது உறுதியானது. ​இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து த.வெ.க நிர்வாகி பிரீத்குமாரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டுத் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளான மேலும் சில மர்ம நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். நள்ளிரவில் குடியிருப்புப் பகுதியில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரே போதையில் ரகளை செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு: “கடினமான கேள்விகளால் ஆசிரியர்கள் மன உளைச்சல்” – தமிழக அரசு தலையிட ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!

we-r-hiring

MUST READ