Homeசெய்திகள்சென்னைமின் தடை அறிவிப்பு: நாளை (ஜூலை 9) சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம்...

மின் தடை அறிவிப்பு: நாளை (ஜூலை 9) சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்

-

- Advertisement -

சென்னையில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை, வியாழக்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை

we-r-hiring

மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்:

ஆவடி: திருமுல்லைவாயில், திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணீஸ்வரர் நகர், எட்டியம்மன் நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 3வது தெருக்கள், சாந்திபுரம், சோழம்பேடு சாலை, சி.டி.எச் சாலை, கணேஷ் நகர், வ.உ.சி நகர், வேணுகோபால் நகர், நேதாஜி நகர், பாலாஜி நகர், கலைஞர் நகர், கோயில்பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர், மசூதி தெரு, கன்னட பாளையம்.

ராமாபுரம்: செந்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், கோத்தாரி நகர், அன்னை சத்யா நகர், ராகவேந்திரா நகர், நரசிம்மன் நகர், ராஜேஸ்வரி நகர், அனீஷ் நகர்.

முடிச்சூர்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி குவார்ட்டர்ஸ், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஸ்து சாலை, நடுவீரப்பட்டு.

திருமுடிவாக்கம்: எருமையூர், கிரஷர் பகுதி, கிஷ்கிந்தா மெயின் ரோடு, ராஜீவ் நகர், சோபா குயின்ஸ்லாந்து, இ.கே அவென்யூ, ஜி.ஆர் நகர்.

பெசன்ட் நகர்: 7வது அவென்யூ, ருக்மணி சாலை, டைகர் வரதாச்சாரியார் சாலை, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, எம்.ஜி.ஆர் சாலை.

பூந்தமல்லி: ஜே.ஜே நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி மெயின் ரோடு, சென்னீர்குப்பம் கண்ணபாளையம், ஒயில்சேரி, பாரிவாக்கம், பிடாரிதாங்கல், பானவேடுதோட்டம், கொளப்பஞ்சேரி, செம்பரம்பாக்கம் நசரத்பேட்டை கிராமம், அகரமேல், மலையம்பாக்கம்.

டி.ஐ சைக்கிள்ஸ் (TI Cycles): ராமாபுரம், வரதராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலை, பட்டரவாக்கம் சாலை, சம்தாரியா நகர், ஓ.வி அழகேசன் நகர்.

மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்.எஸ்.எஸ் நகர், ஆட்கோ நகர், மேட்டுத் தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகப்பிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கண்ணம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை.

அடையாறு: கெனால் பேங்க் சாலை (Canal Bank Road).

நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ