spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஜெ இ இ மெயின் தேர்வு - தேசியத் தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பு…

ஜெ இ இ மெயின் தேர்வு – தேசியத் தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பு…

-

- Advertisement -

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 2026-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency – NTA) அறிவித்துள்ளது.ஜெ இ இ மெயின் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை(NTA) வெளியீடு…

இதுதொடர்பாக தேசியத் தேர்வு முகமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஐடி, ஐஐஐடி,என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-1ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-2ம் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் என இரண்டு முறை நடத்தப்படும். அதன்படி 2026-2027ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதலாவது ஜெஇஇ மெயின் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதள முகவரி மூலம் நவம்பர் 27ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!

we-r-hiring

MUST READ