spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsவயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!

வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!

-

- Advertisement -

இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார்.வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் தொடங்கி பாலிவுட் வரை பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். ஏவி மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அந்த காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பின்னர் கமல், ரஜினி என பல நட்சத்திரங்களை வைத்து நூற்றுக்கணக்கான படங்களை தயாரித்தவா் என்ற பெருமைக்குரியவா்.

மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் கவனித்து வந்தார். இவரது காலத்தில் தான் ஏவிஎம் நிறுவனம் பிரம்மாண்ட படங்களை தயாரிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு உதாரணம் தான் சிவாஜி. ரஜினிகாந்த் நடித்திருந்த சிவாஜி படத்தை ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அதன் மூலம் தமிழ் திரையுலகில் புதிய வசூல் சாதனையை அந்த படம் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னடக்கத்துக்கு அடையாளமாக ஏவிஎம் சரவணன் தான் என்று சொல்வார்கள். பெரும் பணம், புகழ் இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் கைகளை கட்டிக்கொண்டு தான் பேசுவார். இதை வைத்து திரைப்படங்களில் கூட நிறைய காட்சிகள் வந்திருக்கிறது. கை கட்டியவர் எல்லாம்.. வெள்ளை உடை போட்டவர் எல்லாம் ஏ.வி.எம்.சரவணன் ஆகி விட முடியுமா என்று கூட சொல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார். அவரது உடல் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மொழி திரை ஆளுமைகளும் அரசியல் தலைவர்களும் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிழைக்க வந்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது – மன்சூர் அலிகான்

we-r-hiring

MUST READ