spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்

செய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்

-

- Advertisement -

சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா?, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.செய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்
இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குவாரியில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் மீது கொடூரத் தாக்கல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தனக்குச் சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தியதற்காக 50க்கும் அதிகமான குண்டர்களை ஏவி நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

 

we-r-hiring

கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா? கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, சட்டவிரோத குவாரியை நடத்தியதோடு, அதனைச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உரிய சிகிச்சை வழங்கிடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…

MUST READ