Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி...

பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்

-

- Advertisement -

பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலபாரதி தெரிவித்துள்ளாா். பெண்களை இழிவுபடுத்திய சி.வி. சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மா.கம்யூ. மூத்த தலைவர் பாலபாரதி ஆவேசம்

அரசு வழங்கும் இலவசப் பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டுப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலபாரதி, அவர் ஒட்டுமொத்த தமிழக பெண்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சி.வி. சண்முகம், திமுக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் போது, “இலவசமாக மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார்கள்… அடுத்து ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும் இலவசமாகக் கொடுப்பார்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பாலபாரதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
“அநாகரிகமான பேச்சு: அரசியலில் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது அரசு வழங்கும் இலவசப் பொருளாகவோ கருதுவது சி.வி. சண்முகத்தின் ஆணாதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது.

பொதுவாழ்வில் ஒழுக்கம் தேவை: பலமுறை அமைச்சராகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவர், பொதுவெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்த அவர், “தமிழகப் பெண்களின் தன்மானத்தைச் சீண்டும் வகையில் பேசியுள்ள சி.வி. சண்முகம், உடனடியாக தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளாா்.

தலைமை மௌனம் காப்பது ஏன்?
சி.வி. சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மாதர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. “பெண்களை இழிவுபடுத்திய தனது கட்சி நிர்வாகி மீது அதிமுக தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்?” என்றும் பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறத் துடிக்கும் அரசியல்வாதிகள், அவர்களைக் கேலிப் பொருளாகப் பேசுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“எனக்கு நயன்தாரா வேணும்.. கனவ நிறைவேத்துவாரா?” – சி.வி. சண்முகத்தின் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை!

MUST READ