Homeசெய்திகள்தமிழ்நாடு"உதயநிதி கைது ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் நடவடிக்கை!" — புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்...

“உதயநிதி கைது ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் நடவடிக்கை!” — புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!

-

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் அரசியல் களத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், “ஒரே ஒரு வார்த்தைக்காக 9 பிரிவுகளில் வழக்கா? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என வலியுறுத்தல்.

"உதயநிதி

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கை ஜனநாயக மாண்புகளை முற்றிலும் சிதைக்கும் செயல் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு வார்த்தைக்காக 9 பிரிவுகளில் வழக்கா?
“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்துள்ள நடவடிக்கை எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அவர் பேசிய ஒரே ஒரு வார்த்தைக்காக, அதைப்பெரிதுபடுத்தி 9 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அவர் தனது பேச்சில் நேரடியாக எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. அவ்வாறு இருக்கும்போது, அவராகவே ஒரு மறைமுகப் பொருளைக் கற்பித்துக்கொண்டு, அவர் மீது வழக்குப் போட்டு கைது செய்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”

பட்ஜெட் கூட்டத் தொடர் வேளையில் ஜனநாயக விரோதம்
“நாளை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முக்கியமான சூழலில், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் மாண்புகளை முற்றிலும் சிதைக்கும் நடவடிக்கையாகும்.

அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. எனவே, கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை காவல்துறை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.”

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: ஜவாஹிருல்லா கண்டனம்!

MUST READ